காலி முகத் திடல் கடலில் மிதக்கும் மர்மப் பொருட்கள்…!

காலி முகத் திடல் பகுதியில் மர்மப் பொருட்கள் மிதப்பது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள காலி முகத் திடல் பகுதியிலேயே மேற்படி மர்மப் பொருட்கள் எம்மால் அவதானிக்கப்பட்டன.

குறித்த பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அத்துடன் பல விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானவர்களால் பாவனைக்குட்படுத்தப்பட்டு கடலுக்குள் வீசப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களே இவ்வாறு கடலில் மர்மமான முறையில் மிதந்து கொண்டிருந்தன.

கரிய நிறமடைந்து நூற்றுக்கணக்கில் போத்தல்கள் கடலில் மிதந்து கொண்டிருந்தன.

எமது இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பல்லவா?

நாம் பாவிக்கும் பொருட்களின் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டியது எமது கடமை அல்லவா?

மக்களே…

இது உங்கள் கவனத்திற்கு…

காலி முகத் திடல் கடலில் மிதக்கும் மர்மப் பொருட்கள்…! https://sigaramnewslk.wordpress.com/2019/08/22/colombo-galle-face-plastic-wastage/

#LK #LKA #Colombo #Plastic #waste #sea #tourism #Sigaram #NewsLK

Leave a comment